எங்கெங்கு காணினும்....
நாட்டரசியலில்
மாற்றம் வரும் என்று
எத்தனை தேர்தல்
கண்டாயிற்று....
ஏமாற்றத்தால்
நாட்டமில்லாது போயிற்று
வாழ்க்கை அரசியலில்
போராட்டங்கள் பலவும்தான்
வெற்றி நடை போடுகிறேன்
சுற்றம் நெற்றிப் புருவம்
உயர்த்தி நோக்கும் வண்ணம்...
அலுவலக அரசியலோ
தினக் கொடுமாயாகிவிட
அதிகார துஷ்ப்ரயோகம்
மெது விஷமாய்....
வெறுத்தொதுக்க இயலாமல்
போராட்டத்தினூடே...
மறக்க நினைத்து
எழுத்துலகில் தடம் பதித்தேன்
தகிக்கிரதென் நெஞ்சம்
அங்குமோர் அரசியல் கண்டு
கொடுமை.. கொடுமை என்று
கோவிலுக்குப் போனால்
அங்கொரு கொடுமை
"ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்"
"கலை" உரைத்த சேதி கண்டு
மனம் கலங்கித்தான் போகிறது
நிலைமாறும் நம்பிக்கையில்
எழுத்தோடு என் பயணம்
தொடரத்தான் போகிறது
நிலை மாறத்தான்
மனம் வேண்டுகிறது
மாறும் ஓர் நாளில்
நல்ல மாற்றங்களின்
எதிர்பார்ப்பினில்...