தண்ணீர் தண்ணீர்

உய்த்திடும் உயிர்கள் உயிராய் வாழ்வதற்கு
நீரும்உணவும் நிச்சயம் தேவை நிலையாய் !
இயற்கைத் தந்திடும் இன்பங்களில் ஒன்று
தணியாத தாகத்தில் தணிந்திடும் நேரங்கள் !

மனிதன் காலம்தவறி கடமை ஆற்றினால்
கால்இடறி கண்மாயில் விழுந்த கதையாகிடும் !
வளத்தைத் தந்திடும் வான்மழை பொய்த்தால்
வாழ்ந்திடும் உயிர்களும் காய்ந்திடும் பயிர்களாய் !

பொழிந்திடும் மழையை தேக்கிடும் நதிகள்
பாய்ந்திடும் நீரால் போக்கிடும் பசியை !
நதிகள் வற்றினால் நாடும் வறண்டிடும்
நதிகளை இணைத்தால் நானிலமும் வாழ்ந்திடும் !

இருந்திடும் நீரை இயன்றளவு பகிர்ந்திட்டால்
உயிர்களும் வாழும் பூமியும் பசுமையாகும் !
மாநிலங்கள் உரிமையென்று மார்தட்டினால்
காணிலங்கள் கண்ணீர்விடும் காயங்கள் உண்டாகும் !

வீராப்புபேசி காலத்தை விரயம் ஆக்காமல்
விளைநிலமாய் இதயத்தில் நீரைப் பாய்ச்சுங்கள் !
நதிகள் இணைப்புதான் நிரந்தர தீர்வானால்
நாடே இணைந்திடுங்கள்
நாளைய தலைமுறைக்காக !


பழனி குமார்

எழுதியவர் : (7-Dec-12, 4:43 pm)
பார்வை : 158

மேலே