பயணத்தின் பயணம்
ஒளியைத் தேடி
இருள் பயணம்...
நதியின் இருப்பைத் தேடி
தண்ணீர் பயணம்
வாழ்க்கையைத் தேடிக்
கிழவன் பயணம்
காதலைத் தேடி
காதலர்கள் பயணம்
நிலவைத் தேடி
நட்சத்திரங்கள் பயணம்
அழகைத் தேடி
நிலவு பயணம்
மணத்தைத் தேடி
மலர்கள் பயணம்
அரசர்களைத் தேடி
அரசே பயணம்
மின்சாரத்தைத் தேடி
மின்மினிகள் பயணம்
நாள்களைத் தேடிக்
கிழமைகள் பயணம்
சூரியனைத் தேடி
நிலவு பயணம்
மேகத்தைத் தேடி
மழை பயணம்
திருடனைத் தேடிக்
கயமை பயணம்
சுமையைத் தேடிக்
கூலிகள் பயணம்
வரிகளைத் தேடி
சொற்கள் பயணம்
பிழைகளைத் தேடி
எழுத்துகள் பயணம்
எளிமையைத் தேடி
வலிமை பயணம்
மனிதனைத் தேடி
எல்லாம் பயணம்
மக்களைத் தேடி
பூக்கள் பயணம்
பூக்களைத் தேடி
மாலைகள் பயணம்
நற்காலையைத் தேடி
மாலை பயணம்
மேட்டைத் தேடிப்
பள்ளங்கள் பயணம்
உறவைத் தேடி
உள்ளங்கள் பயணம்
நாற்றைத் தேடி
வயல்கள் பயணம்
பயணிகளைத் தேடி
பேருந்து பயணம்
பயணத்தைத் தேடிப்
பாதைகள் பயணம்
புலரியைத் தேடி
விடியல் பயணம்.....