என் வாழ்வின் பெளர்ணமி

என் வாழ்க்கை
வானம் எங்கும்
நட்சத்திர புள்ளிகள் ......
கோலம் போட
தேடினேன் ஒருத்தியை !
நீ
முழு நிலவாகவே வந்தாய் !
இத்தனைக்கும்
நீ என்னை காதலிப்பாய் என்றும்
நான் உன்னை காதலிப்பேன் என்றும்
ஆருடம் சொல்ல முடியாத
அதிசய நாட்கள்
மறைந்து போய் விடவில்லை .
உன்னை பார்க்காத
சில நாட்கள் மட்டும்
சூரிய கிரகணமாகவும்
சந்திர கிரகணமாகவும்
வந்து போகின்றன ........
உன் மனத்திரையில் நானும்
என் மனத்திரையில் நீயும்
பதிந்திருந்த பின்னர்
முதன்முதலாய் அமாவாசை இரவில்
என் வீட்டு ஜன்னலை திறக்கின்றேன் .
இப்பொழுதும் ..........
என் ஜன்னலுக்குள் மட்டும்
பௌர்ணமி வெளிச்சம் பரவுகிறது !!!