காதலை கொன்ற நட்பு..
காதலை கொன்ற நட்பு..
* நொடி முள்ளால்
குத்தி கொண்டு
தற்கொலை செய்கிறது கடிகாரம் ..
* தண்டினை வெட்டி
தண்ணீருக்குள் தானாய்
மூழ்கிறது தாமரை.
*கடற் கரை தாண்டி
வந்து விழுகிறது
விடியாத விண் மீன் ..
*தன் கொடியில்
தானே சுருக்கு
மாட்டி கொள்ளுகிறது மலர்கள்...
* எந்த பொழுதில் நீ
என்னை பார்த்து சிரித்தாயோ
* உன்னை நான்
ஏற்று கொண்டேன் காதலாய்..
* என்னை நீயும்
ஏற்று கொண்டாய் நட்பாய்.
* ஆனாலும்
ஆண்டு பல
ஆன பின்பும்
* இன்னும் நீ உன்
நட்பால் கொலை செய்கிறாய்
என் காதலை.