மோக ஆலாபனை

வேசியின் வீதி சென்றவன்
விடிந்து விட்டது
திரும்பிவிட்டான்
வேசி பற்றி கவிஞன்
கண்விழித்து
விடிய விடிய எழுதிய
கவிதை இன்னும் முடியவில்லை
பகலிலும் தொடர்கிறது
காமத்தை தேடியவன் ஓய்ந்து விட்டான்
வீடு திரும்பி விட்டான்
காமத்தின் மோக ஆலாபனைக்கு
கவிதையில் முடிவு ஏது !
மாப்பசான் மூல குரு
ஐயரின் மாவிலை
புரோட்சனமாக
வேசியிலும் தூசியிலும்
இளஞ்சாரலை தூவுகிறேன்
புனிதம் பெறட்டும்

---கவின் சாரலன்

கவிக்குறிப்பு : தூ . சிவபாலனின் "விபச்சாரிக்கு"
கவி நண்பர் மங்காத்தா நகைச் சுவையாகச்
சொன்ன பதிலில் விளைந்த கவிதை.

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-12, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 383

மேலே