இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளுங்கள் ....
இதோ ஓர் இறுதி ஊர்வலம்...
கூக்குரலிடும்,
என் இதயத்தின் இறுதி ஓலம்...
மலர் மாலை வேண்டாம்
கண்ணீர்த்துளி சிந்த வேண்டாம்
கோடித்துணி வேண்டாம்
பாடை வேண்டாம்,
பல்லக்கு வேண்டாம்
பலபேரின் ஒப்பாரி வேண்டாம்...
தூக்கி செல்ல ஆட்கள் வேண்டாம்
தாரை தப்பட்டை வேண்டாம்
இவ்விரங்கல் செய்தியை,
தரணி எங்கும் கூற வேண்டாம்
வந்து விடுகிறேன்
வசந்தம் வந்து தருகிறேன்
என்று கூறிய
மன்னவன் இன்று விலக்கியதால்,
மனம் மாறி சென்றதால் ...
என்னை மறந்து போனதால்,
மலர் மாலை சூட மறுத்ததால்,
மாற்றானை மணந்து கொள் என்றதால்,
என்னை வெறுத்ததால்,
ஏற்க மறுத்ததால்,
சிறிதும் மதிக்காமல்
துச்சமாய் எண்ணி
தூர வீசியதால்...
இதோ..
இதோ..
துடி துடித்து துயர் தாளாமல்
கீழே விழுந்து அழுது புரண்டு
ஆறா துன்பத்திலே வீழ்ந்தது...
ஆசை தீபம் அணைந்து விட்டது
கனவெல்லாம் காற்றில் பறந்து விட்டது
வாழ்க்கை இப்போது வெறுத்துவிட்டது
முற்றும் துறந்து விட்டது
முடிவு ஒன்று தேடிக்கொண்டது
கழுமரம் ஏறிவிட்டது
காதல், காலம் ஆகிவிட்டது
தற்கொலை செய்து தன்னை தானே
வென்று விட்டது
தவிப்பை தள்ளி விட்டது...
இறந்து கிடக்கும்
என் காதலை பாருங்கள்..
இது...
ஓர் காதல் காவியம்
உண்மையான காதலின் உயிர் ஓவியம்
பாவி நெஞ்சில் கருவுற்ற
பால் மனம் மாறா பச்சிளங்காதல்
பருவக்காதல்,
பக்குவமில்லாத பசுமையான காதல்
முதல் காதல் இது,
முக்கோண காதல்
உயிரின் வலி கண்டு
உதிரத்தின் நிறம் கொண்டு
இங்கே உறைந்து கிடக்கிறது
என்ன பாவம் செய்தது?
பாதி வயது தாண்டும் முன்னே
பறக்க துணிந்து விட்டது ...
பொறுக்க முடியாமலே
நெஞ்சம் தகிக்க முடியாமலே
ஊமையாகி போன உள்ளம்
உறங்கி போய் கிடப்பதை
பாருங்கள்...
கைகளில் ஏந்தி
புதைக்க ஓர் இடம் தேடி
வீதிகளில் ஊர்வலம் வருகிறேன்..
காதலிக்கும் அனைவரும்,
காதலித்த அனைவரும்
வாருங்கள்... வாருங்கள்...
என் காதலிற்கு இறுதி மரியாதையை செய்யுங்கள்...
-PRIYA