மகிழ்ச்சியோ மகிழ்ச்சி......

அனைவருக்கும் வணக்கம்,

எப்படி எழுதுவதென்றே தெரியாமல் ஒரு நாள் கடந்துவிட்டது இனிமேலும் நாட்களை கடத்துவதற்கு மனமில்லை அதனால் எழுத தொடங்கிவிட்டேன்,

என்னவென்று தெரியுமா? எழுத்து நண்பர்கள் என் இல்லத்திற்கு வந்த அந்த மறக்க முடியாத மகிழ்ச்சியான நாளைத்தான் சொல்ல நினைக்கிறேன், மகிழ்ச்சி அருவி கொட்டுவதால் வார்த்தைகள் சிதறுகின்றன வார்த்தைகளை பிடிக்க இயலவில்லை,

சரி சரி யார் யார் வந்தார்கள் என்று சொல்லிவிடுகிறேன், டாக்டர் ஐயா தம்பதிகளாக வந்தார்கள், ஹரிஹரன், இன்போ அம்பிகா அவரின் கணவர் அவர்களின் குட்டிக்குழந்தை அது வெகு சுட்டிக்குழந்தை, அப்புறம் நம்ம செல்லப் பிள்ளை புலமி அம்பிகா,

அன்றைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அப்புறம் மாலையில் டாக்டர் ஐயா அவர்களின் இல்லத்துக்கு சென்றோம் இனிய உபசரிப்பில் இன்புற செய்தார்கள், ஐயாவின் மூத்த மகன் லண்டனில் இருக்கிறார் அவரிடம் வீடியோ சாட்டிங்கில் எங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியை பல மடங்கு உயர்த்திவிட்டார், அப்புறம் அங்கிருந்து விடைபெற்றோம், இன்போ அம்பிகா கோவிலுக்கு சென்றுவிட்டார்கள், நானும் ஹரிஹரனும் எங்கள் வீட்டிற்கு வந்தோம் பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருந்தார் அப்புறம் என் கணவர் வந்ததும் அவரிடமும் பேசிவிட்டு இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கோவை சென்று விட்டார்,

இதுபோல் எழுத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் நட்பாக இருந்திட என் வாழ்த்துக்கள்.

பிரியமுடன் மதி...

எழுதியவர் : நா.வளர்மதி. (11-Dec-12, 4:44 pm)
பார்வை : 230

மேலே