பாகுபாடு

வேறு படுத்திப் பார்த்தால் தெரியும்
வேர மரமா எனப் புரியும்-முற்றும்
சேறு படிந்த வாழ்விதில் நம்மைச்
சேராதவை எதுவெனத் தெரியும்.

நிலையானதொரு பொருளையும் நெடுனாள்
நில்லா உணர்வுப் பிழம்பையும் -ஒரு
நிலயினில் நிறுத்திப் பிரித்துப் பார்த்திட
நிற்பதில் நிஜமெது தெளிந்து விடும்

ஓட்டிச் செல்லுவார் உயர்ந்த மலைக்கு
பலியென வெட்டிச் சாய்த்திட - அந்த
ஆட்டு மந்தைக்கு அது தெரியாது
ஆயினும் அது நடை போட்டிடும்.

பாட்டுப் பாடியும் ஆட்டாம் ஆடியும்
பயனிலா வாழ்வு கழிந்திடும் - நன்கு
பாகு படுத்திப் பார்த்தால் மட்டுமே
படையலா பூசாரியா எனப் புரியும்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (11-Dec-12, 4:45 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 93

மேலே