உன்னை என்னவென்று சொல்ல பெண்ணே ?

நித்தமும் உன்னை
நினைத்து நினைத்து
என் நித்திரையை
துளைக்கிறேன் தினமும் ...

நீ என்னோடு
பேச மறுத்தாலும்
உன் நினைவோடு
தினம் தினம் பேசிக்
கொண்டிருக்கிறேன் ...

உன் நினைவோடு
நான் பேசும்போதெல்லாம்
என் நிலை
அறியாமல் தவிக்கிறேன்...

என் நிலை பார்த்து
பார்ப்பவர் எல்லாம்
எனக்காக வருத்தம் கொள்ள ...
இந்த நிலை எனக்கு தந்த
உன்னையே மனம்
எண்ண எண்ண
கடக்கிறேன்
ஒவ்வொரு நொடியையும் ...

காதலின் வலி
கூட இன்பம் என்று
எழுத தான் முடிகிறதே
தவிர வலியை உணர வழி இல்லையே என்னிடத்தில் உயிரே ...

என்னோடு சேர்ந்து விடு அன்பே
நாம் விண்ணோடு சேர்வோம் ...
உலகம் காணாத காதலை
உன்னோடு வாழ்ந்து விட வேண்டும்
என்றே துடிக்கிறேன் ...

குறையும் கூட ஒன்றும் இல்லை
தான் எனக்கும் ....
வாழ்வில் என்றும் நிறைவை
தான் தருவேன் உனக்கும்....

நீ யோசித்து சொல்கிறேன்
என்றால் கூட அது போதும் ...
நினைத்து நினைத்து
இன்பம் கொள்ள
ஆனால் என் நிலையை
யோசிக்கவும் தயங்கும்
உன்னை என்னவென்று சொல்ல பெண்ணே ?

எழுதியவர் : கருணாநிதி. கா (11-Dec-12, 7:42 pm)
பார்வை : 320

மேலே