பாரதியும் ஒரு கவிதையின் தொடக்கமும் !

ஆறு முழுவதையும்
ஆரஞ்சு வண்ணத்தில்
நிரப்பிக் கொண்டு இருந்தது
அந்தி வானம் !

அங்கே
ஆற்றங்கரையில்
அளவளாவிக்
கொண்டிருந்தது
நண்பர்களுடன்
முண்டாசு கட்டிய
தன்மானம் !

எல்லோரும்
பேசிக்கொண்டிருந்தார்கள்!

எங்கள் மானக் கவி மட்டும்
வானத்தை பார்த்துக் கொண்டிருந்தது !

அப்போது
சூரியனை மேகம்
கவ்வி இழுத்துக் கொண்டு
போய்க் கொண்டிருந்தது !

"என்ன பாரதி
சிந்தனை ?" என்று
கூட்டத்தில் ஒரு
நண்பர் கேட்டார்
எங்கள் கவியிடம் !

கேட்டதும்
பாரதி என்னும்
பைந்தமிழ்ச் சாரதி சொன்னது :

"தருமத்தின் வாழ்வுதன்னை
சூது கவ்வும்!
மறுபடியும் தருமம் வெல்லும்!" என்று

இதுதான் பாரதி

இயற்கையின் நிகழ்வை
எங்கே கொண்டு போய்ப்
பொருத்தினார் பாருங்கள்!

இதுதான் கவிதை
எப்படி தொடங்கியது பாருங்கள்!

எழுதியவர் : முத்து நாடன் (11-Dec-12, 11:42 pm)
பார்வை : 107

மேலே