பாராளுமன்றத்தில் வெடித்தது...............

பாராளுமன்றத்தில்
வெடித்தது ..............
-----------------------------------------------------------
அந்நிய சுவாசத்தில்
நாசியை தொலைத்து
மெல்ல மெல்ல
மடிந்து கிடந்த
சந்தைச் சடலங்கள்
-----------------------------------------------------
ரத்த வாடையை
மோப்பம் பிடித்து
வட்டமிட்டு கொண்டிருந்தன
பன்னாட்டு பறவைகள்.
-------------------------------------------------------
எந்திர புகைமூட்டத்தில்
சுவாசிக்கத் திணறின
வயதுமுதிர்ந்த மரங்கள்...
--------------------------------------------------------
பிளவுற்று
சிதறிக்கிடந்தன
தரிசல் நிலங்கள்....
---------------------------------------------------
முயற்சித்தும் முயற்சித்தும்
அணைக்க முடியாமல்
கொளுந்து விட்டெரியும்
பசி.
----------------------------------------------
பள்ளமாகி பள்ளமாகி
நெஞ்செலும்புக்குள்
தஞ்சமடைய முற்பட்டன
குடல் வெளிகள்
---------------------------------------------
பாராளுமன்றத்தில்
வெடித்தது
‘நிதிநிலை அறிக்கை’ என்ற
வெடிகுண்டு அது..

எழுதியவர் : sindha (11-Dec-12, 11:16 pm)
பார்வை : 129

மேலே