கவிதை வாங்கலையோ... கவிதை .....
கணினி உலகத்திலே
"எழுத்து"(க்) கடை
திறந்து வைத்து
கவிதைகளை விற்கின்றேன்
எழுத்து நண்பர்களின்
கருத்துக்களே
அதன் விலையாய்....
போட்டிக் கடை நடுவே
போராடி விற்கின்றேன்
வாங்குதற்கு ஒரு சிலரே
வியாபாரம் மந்த நிலை...
சோர்ந்து விட மாட்டேன்
ஓய்ந்தும் விழ மாட்டேன்
நல்ல கருத்துக்களை
தொடுத்தெடுத்து கவிதைகளாய்
சந்தையிலே விற்றிடுவேன்
கருத்துக்களைப் பெற்றிடுவேன்
உணவுப் பொருளல்ல
ஊசிப் போவதற்கு
அழுகும் பொருளல்ல
தூக்கி எறிவதற்கு....
காலம் கடந்தும் விற்பனைகள்
கணிசமான வியாபாரம்...
அடுத்தடுத்த விற்பனையில்
கண்டுவிட ஆசை கொண்டு
உறக்கம் கொஞ்சம் தள்ளுபடி
இனி நடப்பதெல்லாம் நல்லபடி...