எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-35

தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் 35 -ஆவது படைப்பு...

தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்..... இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..

வாசித்து தோழர் சங்கரன் அய்யாவுக்கு வாழ்த்துகள் கூறலாம்..


நண்பனே என் இனிய நண்பனே

வாழ்வின் வெறுமையில்
வெதும்பி நிற்கும் நண்பனே
உறவு கொண்ட உயிர் நண்பன்
கரம் கொடுக்க உடன் நிற்கிறேன்
நண்பனே என் இனிய நண்பனே

எந்த இரவுக்கும்
ஒரு பகலுண்டு
எந்தப் பகலிலும் இரவிலும்
துணை கொடுக்க
நண்பனின் தோளுண்டு
நண்பனே என் இனிய நண்பனே

கனவுகளின் விரிவுகளில்
மிதந்த காலங்கள் உண்டு
விரக்த்தியின் விளிம்பினில்
நீ நின்றாலும்
கைபிடித்து நம்பிக்கை வழி
நடத்திட நானுண்டு
நண்பனே என் இனிய நண்பனே !

வசந்தங்கள் நிரந்திரமில்லா வாழ்வினில்
வறுமை வந்து கதவு தட்டினால்
வாசலைத் திறந்து வரவேற்க யாருண்டு ?
ஏழ்மையில் நானிருந்தாலும்
என் கஞ்சிக் கலயத்தில்
உனக்கும் ஒரு பங்குண்டு
நண்பனே என் இனிய நண்பனே !

ஆனந்த ராகங்களின் ஆலாபனைக் கிடையில்
சோகங்களும் வந்து சேர்ந்தால்
வேதனைகள் வாழ்வின் விளிம்பிற்கே விரட்டிவிட்டால்
துவண்டு விழும்போது துளி விஷம்
வேண்டுமென்று தோன்றும்
நஞ்சு எதற்கு நண்பா என் நெஞ்சுண்டு
என் மனத் தருவில் நீ ஒதுங்கிட நிழல் உண்டு
நண்பனே என் இனிய நண்பனே !

எழுதியவர் : சங்கரன் அய்யா (12-Dec-12, 9:32 pm)
சேர்த்தது : agan
பார்வை : 120

மேலே