தமிழ் மொழி

மூத்த குடி தமிழ் குடி
ஏனோ என் பிள்ளையின் புத்தக பையில்
தமிழுக்கு கடைசி இடம் !

அன்று ஆங்கிலேயனிடம் அடிமையாய் கிடந்தோம்
இன்று ஆங்கிலத்திடம் அடிமையாய் கிடைக்கிறோம் ,
ஆங்கிலேயனே திருந்திவிட்டான் , ஆம்
பைபிளை மட்டும் சுமந்த அவன் கைகள்
இன்று வள்ளுவனின் வரிகளை சுமந்த
புத்தகத்தையும் சுமக்கின்றன !

நுனிநாக்கு ஆங்கிலேய கலாச்சாரத்தில் சிக்கி
தமிழ் கருவிலேயே சிதைக்கப்படுகிறது ,
ஆம் , வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட
சொல்லி கொடுக்கப்படும் பாடம்
டாடி , மம்மி !

தமிழ் புலவர் , தமிழ் அறிஞர்
தமிழ வளர்க்க பாடுபடுபவர்கள்
ஆனால் இவர்களின் பிள்ளைகள் படிப்பதோ
ஆங்கில பள்ளியில் !

பாரதி பாடிவைத்த ,
வள்ளுவன் எழுதிவைத்த வரிகளை,
உலகமே தேடிக்கொண்டிருக்கு இன்று நீயோ
தேடிக்கொண்டிருக்கிறாய் ஆங்கிலத்தை !

மனிதா நீ சுவாசிப்பது தமிழ் காற்று ,
நீ வளர்ந்தது தமிழ் கலாசாரம் ,
உன் புத்தக சுமையில் மட்டும் ,
ஒற்றை புத்தகமாய் தமிழ் !

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும்
விவசாயத்தையும் மருத்துவத்தையும்
இன்றைய காகிதத்தில் பொரிப்பதற்கு முன்பாகவே
அன்றே ஓலைச்சுவடியில் பொரித்து வைத்த தமிழையா இன்று அலட்சியம் செய்கிறாய்!

மனிதா நீ காட்டும் மாற்று மொழி மயக்கத்தினால்
தமிழுக்கு மட்டும் இழுக்கு அல்ல
தமிழா உனக்கும் தான் ,
இனியாவது திருந்து , திருத்து !

வருகின்ற சந்ததியை தமிழால் வளமாக்கு
எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு
என்பதை நீ நாளையே நிரூபித்துக்காட்டு ,
உன் சாதனைகளை உன் சொந்த மொழியில் நிகழ்த்திக்காட்டு !

செம்மொழி தமிழை இன்னும் செம்மையாக்கு
நம்மால் முடியாதது எதுவும் இல்லை
நம் மொழியால் முடியாததும் எதுவும் இல்லை,
வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Dec-12, 10:25 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 320

மேலே