ராஜ தாகம்
பள்ளத் தாக்கினில்பெரிய ”ரபே”மில்
“அதுல்லம்” எனும் அடர்ந்த குகையினில்
பதுங்கிய சிங்கமாய் தாவீது அரசன்
ஒதுங்கிய தோழர் மூவரைத் தேடினான்
தம்மின மக்கள் செத்து மடியும்
யெருசலேம் நகரை காத்திட எண்ணி
படைகளைத் திரட்ட சென்ற மூவரும்
பல நாள் கழிந்து வராதது கண்டான்.
தனதுயிர் நண்பர் அந்த மூவரும்
இஷ்பால், எலியாசர்,ஷம்மா ஆகியோர்
சனமதின் நலனையே எண்ணி இருந்தவன்
நாக்கு வறண்டிட தண்ணீர் தவித்தான்.
வீரர் மூவரும் நினைந்த நேரத்தில்
விரவிய படைகளின் எண்ணிக்கை சொல்ல
வந்தனர் அங்கே கண்டனர் மன்னனை
ஆயினும் சோகம்சிறிதும் இலாதவன், .
“எவராவது எனக்கு குடிக்கத் தண்ணீர்
பெத்லகேமிலிருந்து கொணர்ந்தால் நலமென”,.
பிலிஸ்தியர் படைக்கு கிலி பிடிக்குமாப் போல்
பாயும் அம்பெனப் பறந்தனர் மூவரும்.
தோல் பை கொண்டு தண்ணீர் நிரப்பி
தாவீது அரசன் அருந்திடக் கொடுத்தனர்
”என்னுயிர் நண்பர் இன்னுயிர் பணயம்
வைத்தெடுத்து வந்த நீரை பருகிடேன்”
“எல்லாம் வல்ல இறைவன் அவர்க்கே
அர்ப்பனம் செய்வேன் தப்பிது “என்றான்
தோற்பை நீரைத் தரையினில் ஊற்றி
நட்பின் பெருமையை மாண்புற நட்டான்.