நான் எங்கே தேடுவது ???

தவறினை மன்னித்து
நல் வழி காட்டும்
தந்தை போன்றும்

அன்பை மட்டுமே
அள்ளி கொடுக்கும்
அன்னை போன்றும்

தவிட்டு ரொட்டிக்கும்
சண்டை போடும்
தமையன் போன்றும்

மனம் திறந்து
மட்டற்ற செய்திகளை
பகிர்ந்துகொள்ளும் தோழி போன்றும்
என அனைத்து உறவுமாக வந்து
அரவணைத்து செல்பவன்

எனக்கானவன்,
என் எண்ணத்தில் வாழ்பவன்
எதிர்பார்ப்பை எளிதாக்கி
என்றும் இனிமை தருபவன்

எனது ஆசை நாயகன்
மாங்கல்யம் தரப்போகும் மகராசன்
மட்டற்ற மகிழ்ச்சி கடலில்
மூழ்க வைக்கும் மன்மதன்

நேரங்காலம் இல்லாமல்
எப்போதும் காதலிக்கும்
காதல் கணவன்...
எங்கே ?
எப்படி இருப்பான் ?


பார்த்தவுடன் பிடிக்கும்
முகமாக இருப்பானோ...
புன்முறுவல் பூத்து
புதிதாய் சில வார்த்தைகள் பேசியே
மனதை வருடும் வசந்தமாக இருப்பானா?


என் பெயரின் எழுத்துகள்
நான் பார்க்கும் தருணம்
அவன் நெற்றியில்
எழுதப்பட்டு இருக்குமா??

எனக்கான ஒருவன்
இவ்வுலகில்
படைக்கப்பட்டனா ???
இல்லை
பதுக்கி வைக்கபட்டானா?
பல வருடமாக காத்திருந்தும்
கன்னி மனம் வருந்த...
காலம் ஏன் இன்னும்
கனியாமல் காயப்படுத்துகிறது...?


எட்டு திசையில்
ஏதேனும் ஒரு திசையில் வசிக்கும்
என்னவனை
எப்படி தேடுவது?
நான் எத்திசை சென்று தேடுவது ?




-PRIYA

எழுதியவர் : PRIYA (15-Dec-12, 1:56 am)
பார்வை : 186

மேலே