இயற்கையின் அழுகை ...!!!

கஞ்சிக்கே வழியில்லாமல் கடன் வாங்கி,
நாற்று நட்டேன் ....!!!

பூ பூக்கும் பருவத்தில் புயலடிக்க ,
இரட்டித்தது என் நாடித்துடிப்பு ....!!!

மதில்மேல் பூனையாய் மனங்குலைந்த நான்---
என்ன செய்வேன் ...!!!

பசியால் அழும் குழந்தையை சமாதனம் படுத்துவதா?
இல்லை ...
கண்ணெதிரே நிற்கும் கடங்காரனை சமாதனம் படுத்துவதா?
அந்த கனம் என் கண்ணீரை மறைக்க ..,
மீண்டும் வந்தது மழை ...!!!!

எழுதியவர் : ஆசைதம்பி.இர (15-Dec-12, 2:27 am)
சேர்த்தது : Asai AK222
பார்வை : 141

மேலே