காலம் கனியும்
காத்திரு மகனே காலம் கனியும்
கவலைகள் களையும்
கனவுகள் பலிக்கும்
பொய்யும் தோற்கும்
உண்மை ஜெயிக்கும்
உறக்கத்தை குறை
உழைப்பை பெருக்கு
கடமைகளை கண்ணாய் செய்
வாய்ப்புகளை காந்தமாய் பற்றிக்கொள்
விழிப்புடன் எந்நேரமும் இரு
வீரியமாய் செயல்படு
தன்னபிக்கையே மூச்சாய் கொள் !
காலம் கனியும்
கனவுகள் பலிக்கும் !