லிமரைக்கூ -கேஎஸ்கலை
உண்டானது என்னுள் காதல்
அதனால்-தினமும் உணர்ச்சிகள் துடிக்க
நரம்புக்குள் வெடிக்கும் மோதல் !
*。☆*
நீயன்றோ என்வான் நிலவு
ஏன் விலகிப் போய் நித்தமும்
செய்கிறாய் நீ களவு ?
*。☆*
காணாமல் போனது ரோசம்
அதற்கு காரணமாய் இருப்பது-அவளோடு
நான் கொண்ட பாசம் !
*。☆*
நெஞ்சம் உன்னில் தஞ்சம்
அதனால்-நித்தமும் எனக்கு வேண்டும்
கொஞ்சலோடு உன் மஞ்சம் !
*。☆*
வாழ்க்கை உன்னை தேடும்
நீ-கிடைக்காமல் போனால் கட்டாயம்
யாக்கை மண்ணை நாடும் !
_______________________________________________
(ஈரோடு தமிழன்பன் அய்யாவின் “சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்” எனும் புத்தகம் படித்து லிமரைக்கூ என்ற கவிதை எழுத ஒரு முயற்சி..சரியா பிழையா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)