மாலேகானில் குண்டுவைத்த பெண் தீவிரவாதியை ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், உமாபாரதி!
மாலேகானில் குண்டுவைத்த பெண் தீவிரவாதியை ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், உமாபாரதி!
DEC16, மாலேகான் குண்டுவெடிப்பு "குற்றவாளி" பெண் சாமியாரிணி "பிரக்யா சிங்" டாகூரை நேற்று ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், பா.ஜ.க.வின் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர், உமாபாரதி.
குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி வரும் "காவி பயங்கரவாதிகளுக்கு" பா.ஜ.க.வின் பேராதரவு உண்டு என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பதில் "உளவுத்துறையின் உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு.
இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு" வெளிப்பட்டு, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் "கம்பி" எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
கைதாகி சிறை செல்பவர்களின் குடும்பங்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் பா.ஜ.க.வினர் நிறைவேற்றி வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை.
இதுவரை வெளியிலிருந்து தீவிரவாதிகளை ஆதரித்து வந்த பா.ஜ.க., தற்போது நேரடியாக களத்தில் இறங்கி, காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் - அவர்களை காப்பாற்றவும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.
அதன் வெளிப்பாடு தான், மாலேகானில் குண்டுவைத்த "பெண் சாமியாரிணி பிரக்யா சிங் டாகூரை" போபாலில் உள்ள சென்ட்ரல் ஜெயிலுக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார், பா.ஜ.க.வின் உமாபாரதி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங், பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச அரசு "காவி" பயங்கரவாதிகளுக்கு "புகலிடம்" தருகிறது : திக் விஜய் சிங் குற்றச்சாட்டு!
DEC17, மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு "குண்டுவெடிப்பு" குற்றவாளிகளை பாதுகாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான, திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் - பாதுகாப்பு வழங்குவதும், சட்டப்படி குற்றம் என்றார் அவர்.
நேற்று முன்தினம் இரவு, உஜ்ஜைனை அடுத்த "நாக்தா"வில் வைத்து "காவி பயங்கரவாதி" ராஜேந்தர் சௌத்ரி கைது செய்யப்பட்டுள்ளதால், பா.ஜ.க. அரசு அவர்களை பாதுகாப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்கிறார், திக்விஜய் சிங்.
ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளியை மத்திய போலீஸ் படையினரால் பிடிக்க முடியும்போது, மாநில அரசால் ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை? எனக்கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், குற்றவாளிகளை பாதுகாத்த மாநில போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேடப்படும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோரும், மத்திய பிரதேசத்தில் தான் ஒளிந்துக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற முழு விவரங்களும், மத்திய பிரதேச போலீசுக்கு நன்கு தெரியும் என்று அடித்துக்கூறும் திக் விஜய் சிங், பயங்கரவாதிகளுக்கு மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, ஆதரவளிப்பதாகவும் கூறுகிறார்.
ஆக, இந்து பயங்கரவாதிகளுக்கு விருந்தும் உபசரிப்பும் - முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடியும் உதையும்..! இருட்டு அறையும்..! நல்லா இருக்கு பார்ப்பனியம் நடத்தும் அரசு..? முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீர் வேண்டும் என்று குண்டு வைக்கிறார்கள். இந்து தீவிரவாதிகள் என்ன வேண்டும் என்று குண்டு வைக்கிறார்கள்..? முஸ்லிம்களே இருக்கக் கூடாது என்று குண்டு வைப்பார்களோ..?சிங்களவன் தமிழனே இருக்கக் கூடாது என்று சொல்வதைப் போல உரத்து சொல்கிறார்களா..? இதற்கு சாமரம் வீசுகிறார்கள் ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள்.
போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கி லல்லு முதல் மாயாவதி என்று வடக்கில் என்றால் தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. என்று தொடங்கி தொல்.திருமா மருத்துவர் ராமதாஸ் வைக்கோ கூட இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அளவுக்கு அதிகமாக அல்ல சதா எப்பொழுதுமே கூறிக்கொண்டிருக்கும் பயங்கரவாதம் தீவிரவாதம் என்ற காட்டு கூச்சலுக்கு செவி சாய்ப்பது தான் அல்லது பேசாமல் இருப்பது என்ற நிலை இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டன.
இந்த இரு வார்த்தைகளை வைத்துக் கொண்டு அணைத்து வித ஜனநாயக அடிப்படை உரிமைகளை பறிக்கத் துவங்கி விட்டார்கள். ஓசையின்றி விலைவாசி,வறுமை,ஆற்று நீர் பிரச்னை என்று நிற்காமல் இருட்டில் மூழ்க வைத்துள்ளார்கள்.ஆளும் ஆட்சியாளர்கள்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த இரண்டு வார்த்தை எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. எனவே தான் துப்பாக்கி படம் மூலம் வரவிருக்கிற அல்லது வந்து விட்ட விஸ்வரூபம் படம் வரை முஸ்லிம்களை தீவிரவாதிகளா பயங்கரவாதிகளா காண்பிக்க துவங்குகிறார்கள்.
இந்த இயக்குனர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதத்தை காண்பிக்கும் அளவிற்கு உள்ள மனோதிடம் பல லட்சம் ஊழல் செய்பவர்களை பற்றி எடுக்க துணிவு உண்டா என்ன..?
போராடுபவன் அனைத்தும் பெறுவான், அதை இஸ்லாமிய சமூகம் உணர்ந்துள்ளது. போராடதாவன் சமூகம் சத்தமின்றி துடைத்தெறியப்படும். அல்லது சாதிய சண்டைகளில் சிக்கி, தங்களது அடையாளங்களை இழந்து கலப்பு இனமாக கலப்பு மொழி பேசும் மக்கள் திரளாக மாறிவிடும்.
இந்த இருவார்த்தைகளை வைத்து ஈழத்தில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலையும் இனப்படுகொலையும் செய்து முடித்து விட்டார்கள். இந்த இருவார்த்தைகளை வைத்து மிகப் பெரும் பலன் அடைந்தது அமெரிக்க அரசுதான்.
ஐ.நாவையே அவர்களின் கழிப்பிடமாக கக்கூசாக மாற்றி விட்டார்கள். அரசுகள் சொல்வது தான் எல்லாம் என்று ஆக்கி விட்டார்கள். மக்கள் வேலை ஓட்டு போடுவது மட்டும் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு தெரியும். நாங்கள் சொல்வது தான் எல்லாம் என்கிறார்கள். சர்கோசி முதல் மன்மோகன் மற்றும் மகிந்த ராஜபக்சே வரை.
சங்கிலிக்கருப்பு