முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்

உச்சிவெயிலில்
உடுத்த உடுப்புடன்
குடும்பத்தை சுமக்க-வேண்டிய
எம்மவர்கள்
முதுகில் கூடையை-சுமக்கிறார்கள்
நாணூறு(400)மீற்றர் -மலை
உச்சியில் -ஏறி
கொட்டும் மழையிலும்
கொட்டும் பணியிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
ஒருசான் வயிற்றுக்கு
உயிரையும் துறக்கும்-எம்மவர்கள்
எம் தேயிலைத் -தொழிலாளிகள்

கால்களும் கனக்க
கைகளும் வலிக்க
தான் பெற்ற உறவுகளை
அறுத்து விட்டு
கதிரவன் ஒளிக்கீற்று
பூமா தேவியின் மடியில்-தவள முன்
அப்பா,அம்மா மச்சான் அத்தை
மச்சினிச்சி-என்ற,
உறவுகளை அளைத்தெடுத்து
ஊர் விடிய முன் மலை-உச்சியில்
சங்கமிக்கின்றான்
அவர்கள் தான்-எம்மவர்கள்
தேயிலைத் தோட்ட-தொழிலாளி,

முதுகில் கூடையும்
இடப்பக்கத் தோழில்
உணவுப் பெட்டனமும்
வலப்பக்க தோழில்
தாகத்தை – தீர்க்க தண்ணீரும்
ஒருகையில் கத்தியும்
மறு கையில்-தடியும்
வேதனையை தாங்கிய -சுமையுடன்
தேயிலைக் கொழுந்தினை-பறிக்கிறார்கள்
எம்மவர்கள்

கங்காணம் கணக்கப்பிள்ளை
துரைமார்களின் துன்பம்ஒரு-பக்கம்
குடும்பத்தின் வறுமைஒரு-பக்கம்
இரண்டு சுமையையும்
காலமென்னும் நீரோட்ட -வெள்ளத்தில்
திசைமாறி ஆழ்கடலில்
தத்தளிக்கும் படகு -போல
எம்மவர் வாழ்வு-அலைமோதுகிறது,

தரணம் தப்பினால்
மரணம் என்ற
சுற்று வட்ட-விழிம்பில்
பாம்புகளுக்கும்,அட்டைகளுக்கும்-இடையே
தன் உயிரை ரனமாக்கி
வியர்வையும் இரத்தத்தையும்-சிந்தி
ஒருசான் வயிற்றுக்கு-உயிரை விட்ட
எம்மவர்கள் எத்தனை பேர்
எம்மவர்கள் பாதம் பட்ட
தேயிலைத் தோட்டத்தில்
சென்று பார்த்தாள்
எம்மவர்களின் வரலாற்றை-சொல்லி விடும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எழுதியவர் : -ரூபன்- (17-Dec-12, 7:36 pm)
சேர்த்தது : கவிஞர் தரூபன்
பார்வை : 110

மேலே