லவ் பண்ணனும்..!!

லவ் பண்ணனும்..
லவ் பண்ணிட்டே இருக்கனும்..

முழுசா வெட்டாம விட்ட உன் நகத்தை நோண்டிக் கிட்டே லவ் பண்ணனும்..

உன் கை-ய எடுத்து என் கன்னத்துல வச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

எனக்கான உன் கை இரண்டையும் என் கழுத்த சுத்தி பிடிச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

நெற்றி தாண்டி விழும் உன் தலை முடியை கலச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் கண்கள்-ல இருக்கிற லவ் பார்த்துக்கிட்டே லவ் பண்ணனும்..

கொஞ்சம் பெரிசா இருக்குற உன் மூக்கை பிடுச்சு ஆட்டிக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் உதட்டுக்கு மேல இருக்குற மீசையாகி உன் உதட்டை தொட்டுக்கிட்டே லவ் பண்ணனும்..

உன் கன்னத்த பிடிச்சு என்னை பார்க்க வச்சிட்டே லவ் பண்ணனும்..

பேசும் போது உன் காதை சுத்தி கோலம் போட்டிட்டே லவ் பண்ணனும்..

நீ பேசுற ஒவ்வோரு வார்த்தயையும் லவ் பண்ணனும்..

உன்னோட சின்ன சிரிப்பையும் மிஸ் பண்ணிடாம லவ் பண்ணனும்..

நான் இருக்கேனு சொல்லி உன் கண்கள்-ல வர நீரை தொடச்சுகிட்டே லவ் பண்ணனும்..

என் சந்தோசத்தையும் துக்கத்தையும் பார்த்த உன் மார்புல சாஞ்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

அப்படியே உன் கழுத்த கட்டிக்கிட்டு லவ் யு டா-னு சொல்லிட்டே லவ் பண்ணனும்..

மடியில படுத்துக்கிட்டு உன் கால்களை கெட்டியாக பிடிச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

கடைசி வரைக்கும் உன் கூட வர நான் இருக்கேனு உன் பாதத்துக் கிட்ட சொல்லி அத பிடிச்சுக்கிட்டே லவ் பண்ணனும்..

இப்படி நிறைய....
நடக்கும் போது..
பேசும் போது..
பார்க்கும் போது..
இன்னும்..
எல்லாத்துலயும் லவ் பண்ணிட்டே இருக்கணும்..
ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு நிமிஷமும்..
ஒவ்வொரு நொடியும்..
உன்ன லவ் பண்ணிடே இருக்கணும்..
உன்ன மட்டும் லவ் பண்ணிட்டே இருக்கணும்..

இந்த உலகம் உருவானதே நான் உன்ன லவ் பண்ணிட்டே இருக்கத்தான்-னு இருக்கணும்..
என்னை விட உன்ன யாரும் இவ்ளோ லவ் பண்ண கூடாது..
என்ன கூடாது..??
அது முடியாதுன்ற கர்வத்தோடவே உன்ன லவ் பண்ணிட்டே இருக்கணும்..

என் மனதை வென்ற மனதிற்கு
மடல் அனுப்பும் நேரமிது..
திறந்து பார்!!
நீ பார்ப்பது மடல் அல்ல
என் மனம்..
லவ் யு டா..!!

எழுதியவர் : Sureshema (19-Dec-12, 2:30 pm)
பார்வை : 176

மேலே