நான் – அவள் காதலன்

இவள் – நிற்கா மழை!!!
நான் – அதில் நனையும் குடை!

இவள் – குழந்தையின் சிரிப்பு!!!
நான் – கூடவே இருக்கும் அழுகை!

இவள் – பௌர்ணமி நிலவு!!!
நான் – இருட்டில் பிடித்த கொலுக்கட்டை!

இவள் – ஜன்னல் காற்று!!!
நான் – சவ ஊர்வலம்!

இவள் – அழகிய கவிதை!!!
நான் – அழுகிய குப்பை!

இவள் – அழகின் முழுமை!!!
நான் – காக்கையின் கருமை!

இவள் – மழையில் வானவில்!!!
நான் – இரவின் கெட்ட சொப்பனம்!

இவள் – ஆச்சர்ய குறி!!!
நான் – முதுகு ஒடிந்த கேள்விக்குறி!

ஆனால்
இவள் – என் காதலி!
நான் – அவள் காதலன்!!!…

எழுதியவர் : சிவா சுப்ரமணியம் (19-Dec-12, 8:57 pm)
பார்வை : 176

மேலே