மழை

மண்ணின் மேனியில்
நீரின் ஊசிகளால்
வானம் நெய்யும்
ஈர ஆடை .

நிலா தாதி
அழுக்காகிப்போன தன்
வெள்ளை ஆடையை
கசக்கிப் பிழிந்தபோது
சிதறிய நீர்த்துளிகள்

வானக் குழந்தை
அவ்வப்போது வரைந்து
அழித்துவிடும்
சுவரில்லாச் சித்திரம்.

அந்தரத்தில்
குடியிருக்க கூடுகட்டி
இயற்கை அனர்த்தத்தால்
சிதைந்துவிழும்
ஜலப் பறவைகள்

குடும்பத் தகராறு
காரணமாக
குமுறியழும்
நட்ச்சத்திர குழந்தைகளின்
கண்ணீர்த்துளி .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Dec-12, 10:38 am)
பார்வை : 125

மேலே