காதல் பற்றிய குறிப்பு
காதல்
சிறகடிக்கும் நெஞ்சை
சிதறடிக்க வைக்கும்...
காதல்
நிஜமான உன்னை
நகல் போல் ஆக்கும் ...
காதல்
நினைவுள்ளவனை
நினைவற்றவனக்கும்...
காதல்
சிந்தை உள்ளவனை
சித்திரமாக்கும்...
காதல்
நடுநிசியெல்லாம்
நடுங்க வைக்கும்...
காதல்
காத்திருந்து
தவித்து
இல்லாமல் போகும் ....
காதல்
அன்பு நேசம் ப்ரியம் பாசம்
இதற்கெல்லாம் எதிர்மறை ...
காதல்
வஞ்சம் பாவம் கொடுரம் வன்மை
இதன் மறுபொருள்
காதல் ...