கவிஞன் என்பவன் யார் ?

யார் கவிஞன் ?
கவிஞன் என்பவன் யார் ?

அன்பின் உருவமா ?
இல்லை
ஆற்றலின் வடிவமா ?

இரக்கம் உடையவனா?
இல்லை
ஈகை பண்பாளனா ?

உண்மை உரைப்பவனா ?
இல்லை
உணர்ச்சியை அவிழ்ப்பாவனா ?

கண்ணிர் வடிப்பவனா ?
இல்லை
காவியம் படைப்பவனா ?

உண்மையில் கவிஞன் என்பவன்

ஒரு குழந்தை

மென்மையானவன்
புனிதமானவன்
பயமரியாதவன்

உள்ளதை உள்ளபடியே
உரைக்கும்
உயர்வானவன் ............................................!!!!!!!!

எழுதியவர் : பா.கபிலன் (23-Dec-12, 10:11 pm)
பார்வை : 1065

மேலே