அழகு எங்கு இருக்கிறது…………………..? வாழ்க்கை எங்கு இருக்கிறது……………………………….?

மனிதனாக பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர்களது குணங்கள் நிறங்கள் கொள்கைகள் மனங்கள் எண்ணங்கள் எல்லாமே வெவ்வேறுபட்டவை.
இன்று பல பெண்கள் திருமணம் என்று வரும்போது அழகை தான் முதலில் பார்க்கிறார்கள். தனக்கு வரும் மணமகன் இப்படி இருக்க வேண்டும் வெள்ளையாக இருக்க வேண்டும் அழகாக இருக்க வேண்டும் என்று கூறி தம் வாழ்ககை காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்பது வெள்ளை தோலை. அந்த வெள்ளை மணமகனின் நிறத்தில் இருக்ககூடாது மனதில் இருக்க வேண்டும். புற அழகை பார்க்கிறார்கள். அக அழகை அழகு பார்க்க தவறுகிறார்கள்.. புற அழகில் மயங்கி திருமணம் செய்த எத்தனையோ போ் தம் வாழ்வை கொண்டு நடாத்த முடியாது வாழ்வை இடையிலே தொலைத்து விட்டு நிற்கிறார்கள். முதலில் எல்லோரும் அக அழகை பாருங்கள் . அழகு அங்கே தான் இருக்கிறது.
வாழ்க்கை என்பது ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டு வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும் உடனே அவற்றை மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்ற முடியும். மனிதனுடைய குணங்கள் மாறுபட்டவையாகவே காணப்படும். எல்லோரும் ஓரே குணத்தவர்களாக இருக்க முடியாது. ஒருவருடைய விருப்பு மற்றவருக்கு வெறுப்பாக காணப்படும்.மற்றவர்களுக்கு வெறுப்பானது இன்னொருவருக்கு விருப்பானதாக காணப்படும்.
இறைவனுடைய படைப்புக்களே நம் உயிர்கள். ஒருவர் கறுப்பு நிறமுடையவராக இருக்கிறார். ஒருவர் வெள்ளை நிறமுடையவர்களாக இருக்கிறார். ஒருவர் கட்டையாக இருக்கிறார் ஒருவா் நெட்டையாக இருக்கிறார். இவற்றை எம்மால் மாற்ற முடியுமா ஒரு நாளும் இல்லை. இது இறைவனால் படைக்கப்பட்டது.
மனிதனுடைய கொள்கைகள் வெவ்வேறுபட்டவை. ஒருவன் தான் தன் சொந்த உழைப்பிலே வாழ வேண்டும் என்று நினைப்பான் ஒருவன் மற்றவர்களிடம் பெற்று அதில் வாழ வேண்டும் என்று வாழுவான் இவர்களுடைய கொள்கைகளை மாற்ற முடியாது.
மனித மனங்கள் தான் நல்லதை செய்யவும் தூண்டுகிறது கெட்டதை செய்யவும் தூண்டுகிறது. எண்ணங்கள் வேறுபட்டவை. வெவ்வேறு எண்ணங்களை கொண்ட மனிதர்களால் தான் இன்று புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் தோன்றின.
இவ்வாறான விடயங்களுக்குள்ளேயே வேறுபட்ட இயல்புகள் காணப்படுகின்றது . அவற்றை எல்லாம் அனுசரித்து யார் திறம்பட மேற்கொள்ளப்படுகிறார்களோ அங்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது.
சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. இதனை அனைவரும் புரிந்து கொண்டால் ஒரு நல்ல வாழ்க்கையை அனைவரும் ஏற்படுத்தலாம்.

எழுதியவர் : சுபா (25-Dec-12, 1:18 pm)
சேர்த்தது : Subo Saba
பார்வை : 130

மேலே