வீரத்தின் இலக்கணம்
அழித்தல் அல்ல வீரம்!
ஆக்கமே -> வீரம்!
காத்தலே -> வீரம்!
காத்தலுக்கு துணை போவதே -> வீரம்!
காதல் என்பது கனிவு!
காதல் அல்ல வீரம்!
காதலுக்கு துணை போவதே -> வீரம்!
தமிழனின் வீரம் போரில் தெரிந்தது!
அது எதிரிகளிடம் இருந்து
தம் மக்களை காப்பதில் புரிந்தது!
வெட்டுவது அல்ல வீரம்!
வீழ்ந்தும் எழுவதே -> வீரம்!
தாழ்த்துவது அல்ல -> வீரம்!
தாழ்ந்தவராய் நினைப்பவரிடம் பணிவதே -> வீரம்!
தாழ்மை என்பது கீழ்நிலை. பணிவு என்பது உயர்நிலை!
(வெளிப்பாடுகளில்-
“தாழ்மையான” கருத்தை விட
“பணிவான” கருத்துகளே சிறந்தவை)
துடிப்பல்ல வீரம்!
துடிப்பை தாண்டினால் மட்டுமே -> வீரம்!
அகங்காரம் அல்ல வீரம்!
அதை அடக்குவதே -> வீரம்!
கர்வமல்ல வீரம்! மனம்
கவர்வதே -> வீரம்!
வெறி அல்ல வீரம்!
வெற்றியே -> வீரம்!
அன்பையும் பணிவாய் காட்டுவதே -> வீரம்!
பண்பையும் கனிவாய் சுட்டுவதே -> வீரம்!
மனித குல இலட்சியமே வெற்றி!
வாழ்வதும் வாழ வைப்பதுமே வெற்றி!
அந்த வெற்றிக்குத் துணை போவதே -> வீரம்!
வீர்யம் அல்ல வீரம்!
விரயத்தை தடுப்பதே -> வீரம்!
விவேகத்தின் நிதானமே -> வீரம்!
குரோதம் அல்ல வீரம்!
குதறும் சிந்தனையை வெல்வதே -> வீரம்!
கொதித்துப் போவதல்ல வீரம்!
மதித்து போற்றுதலே -> வீரம்!
ரௌத்திரம் அல்ல வீரம்!
ரௌத்திரத்தின் ஆக்க விளைவே -> வீரம்!
பெண்மையை மதித்தலே -> வீரம்! வீரம்!
அவள் மானம் காத்தலே -> வீரம்! வீரம்!
பெண்மையை போற்றலே -> வீரம்! வீரம்!
அவளை இழிப்பதை தூற்றலே வீரம்! வீரம்!
எத்தர்களை இழிப்பதே -> வீரம்!
எதிரிகள் இல்லா சூழலே -> வீரம்!
துன்புறுத்துவது அல்ல வீரம்!
துயர் துடைப்பதே -> வீரம்!
அழவைப்பது அல்ல வீரம்!
அழுகையின் சூழலை அழிப்பதே -> வீரம்!
அல்லல் துடைப்பதே -> வீரம்!
அன்பை பரப்புவதே -> வீரம்!
இரக்கம் என்பது ஈரம்!
அதை காட்டுவதல்ல வீரம்!
இரக்கம் வேண்டும் சூழலை
இல்லாமல் செய்தலே -> வீரம்!
புனிதம் என்பது வாழ்வின் உயரம்!
புனிதம் என்பது வாழ்வின் இலக்கு!
புனிதம் அல்ல வீரம்!
புனிதம் நோக்கிய பயணம் -> வீரம்!
அடையும் இலக்கைக் காத்தலே -> வீரம்!
மனித உயிர்களில் மகிழ்வே இலக்கு!
அந்த நெகிழ்வை தருவதே பெண்எனும் விளக்கு!
பெண்மை என்பதே -> புனிதம்! புனிதம்!
அந்த புனிதம் காத்தலே -> வீரம்! வீரம்!
(வன்புணர் கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண்ணை தனிநபராய் இருந்து அந்த தருணத்தில் என்னால் காக்க முடியவில்லை எனில், என் அவதாரமாய் பலர் பிறப்பெடுக்கட்டும் இந்த மேற்கண்ட சிந்தனையுடன்!
நடந்த நிகழ்வால், நொந்த மனதிற்கு, குறைந்த படச மருந்தாய் இருக்கவே இந்த மேற்கண்ட படைப்பு. என் இயலாமையின் வெளிப்பாடு அல்ல இது. பெண்மையின் பாதுகாப்பான சூழலை படைப்பதற்காக ஆக்கப்பூர்வ விடைதேடி கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் கிட்டும் என ஆழமாக நம்புகிறேன்)