இணைய தளத்தில் ரசித்த நகைச் சுவை.

முதல்வர் உன்னை ஏன் திட்டினார்
முதலில் நீயென்ன செயதாய் சொல்
நண்பன் ஒருவன் என்னிடம் வந்து
அன்பு வழிய அணைத்துக் கேட்டான்.

நான் என்ன செய்ய இயலும்
நாய் ஒன்று அவர் வளர்த்தாராம்
காணாமல் போனதை விளம்பரம் செய்யென
மூணாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினார்;

“முதல்வரின் நாயைக் காணவில்லை”
என்பதை நான் எழுதும் போது
“முதல்வர் நாயை காணவில்லை”
என்று விளம்பரம் செய்து விட்டேன்.

எழுதியவர் : தா.ஜோசப் ஜூலியஸ் (27-Dec-12, 3:45 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 264

மேலே