பன் பாடுபொருள் மாமணி-2012
பன் பாடுபொருள் மாமணி-2012
தோழமை சொந்தங்களே ...
வணக்கமும் வாழ்த்துக்களும்...
எவரேனும் ஒருவர் ஒரு தலைப்பில் படைப்பு அளித்து அதன் பாதிப்பில் அதன் தழுவலாக பல படைப்புகள் அளிப்பது இலக்கிய உலகில் சர்வ சாதாரணம். அன்றியும் பலவித பாடுப் பொருட்கள் கொண்டதாக ஓர் இலக்கியம் உருக் கொள்ளும் போதுதான் மொழி தன் விரிவை மதம் இனம் எல்லை மானுட வேறுபாடு ...போன்றவைகளைத் தாண்டி விசாலம் பெறும்..
இவ்வகையில் நமது தளத்தில் பாதிப்பு ஏற்படுத்திய ஒரு படைப்பின் தழுவல்களாய் பல படைப்புகள் வந்த நிலையில், சிலர் விரிந்த புருவம் உயர சென்று அப்படியே நிலைத்து விட்ட திடமாய் மாறிப் போகும் அளவில் புது புது பாடுப் பொருட்களில் படைப்புகள் அளித்து நம்மை வியப்பின் விரி எல்லைக்கு பயணிக்க வைத்த அனுபவம் பலரும் பெற்றுள்ளோம் அல்லவா...??
அவ்வகையில் பல பாடுப் பொருட்களை கை கொள்ளும் திறன் கொண்ட தோழர்கள் பாராட்டு பெறுகின்றனர்....அதன் வெளிப்பாடாக
@@@@@ பன் பாடுபொருள் மாமணி @@@@@@
எனும் பட்டம் பெரும் தோழர்கள் இதோ...
* * * * * * * * * தோழர்.வினோதன் * * * * * * * * * * * * * * * *
மற்றும்
* * * * * * * * * தோழர்.ருத்ரா நாகன் * * * * * * * * * * * * * * * *
பாராட்டி மகிழ்வோம் வாரீர்....