வரவேற்போம் புது வருடத்தை

வருடம் மாறுகிறது வாழ்வும் மாறட்டும்
இரவு விடிகிறது இன்னல்கள் மடியட்டும்
பொழுது புலர்கிறது இன்பம் மலரட்டும்
மனங்கள் தெளியட்டும் ,மகிழ்ச்சி பொங்கட்டும்
ஒற்றுமை ஓங்கட்டும் வேற்றுமை களையட்டும்
மதவெறி அழியட்டும் சாதிகள் ஒழியட்டும்
சலனங்கள் நீங்கட்டும் சச்சரவுகள் மறையட்டும்
அன்பே பரவட்டும் பண்புகள் வளரட்டும்
பகையுணர்வு மங்கட்டும் நட்புணர்வு தேங்கட்டும்
கொலைவெறி எரியட்டும் பணவெறி அடங்கட்டும்
நட்புவட்டம் விரியட்டும் நல்லிணக்கம் மலரட்டும்
உள்ளங்கள் இணையட்டும் இல்லங்கள் மிளிரட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Dec-12, 9:25 pm)
பார்வை : 144

மேலே