அப்பாவுக்காக
எங்கள் வீட்டு "குடும்ப தலைவன் "
பொறுப்பான "உழைப்பாளி "
அன்பில் "கடவுள்" , அறிவுரையில் "ஆசான் "
குலம் காக்கும் "குலதெய்வம் "!
அன்னை வயிற்றில் "பத்து மாதம் "
அப்பன் வயிற்றில் "பத்து வருடம் "
பஞ்சு மெத்தையும் பட்டு துணியும்
"அப்பன் தொப்பைக்கு" இணையாகுமா !
என் விளையாட்டு பருவத்தின் "முதல் மைதானம் "
நான் என்னும் போதெல்லாம் அவரே
எனக்கு "குதிரையும் , யானையும் "
குத்தி பழகும் "சண்டைக்காரரும் "!
அம்மாவின் இடுப்பை தாண்டி "அப்பாவின் தோள்"
படிப்படியான என் வாழ்க்கை பயணத்தில்
அடுத்த முன்னேற்றம் "அப்பனுக்கு அப்பாவுமாய் "
"நண்பனுக்கு நண்பனாய் "நான் கற்றதும் பெற்றதும்
பகிர்ந்து கொண்டதும் பலப்பல !
என் கல்வி பயணத்தில்
"அ" நாவும் "ஆ"வன்னாவும்
கரம் பிடித்து கற்றுக்கொடுத்த "முதல் கை "!
"சிறுவயதுபயம்" என்னை சீண்டிப்பார்க்க
பக்குவமாய் "வீரம்" சொன்ன சொந்தக்காரர்
"குடும்பத்தின் தூணாய் எங்கள் துணையாய் "
காலத்திற்கும் தியாகத்தோடு !
அடம்பிடித்து கேட்ட "குச்சி மிட்டாய்" முதல்
"கோர்ட் சூட்" வரை எதுவும் பஞ்சமில்லாமல்
நிறைந்திருக்கு என் "வீட்டு பீரோவில் "!
"நல்லொழுக்கம் " கற்றுத்தந்து
நாளெல்லாம் உழைத்து பள்ளிக்கும் கல்லூரிக்கும்
"பணத்தை அள்ளி வீசி என் லட்சியத்தின் எல்லையை" காட்டிய சாதனை நாயகனை என்னென்று சொல்வேன் !
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து
உட்கார்ந்து விட்டார் "ஊனனாய் கூனனாய் "
இதோ புறப்பட்டேன் நான்
"என்னை" தோளில் சுமந்தவரை
"இன்றுமுதல் சுமப்பேன் இறுதிவரை !