என்னவனின் கவிதைகள்!

என்னவனே!
உன் கவிதைக்கு உயிர் கொடுத்த நானே
உன் கவிதையின் உயிரையும்
எடுத்துவிட்டேன் என்று
சொன்னாயே!

மற்றவர்கள் பார்வையில் வேண்டுமானால்
உன் கவிதைகள் உயிரற்று மறைக்கப்பட்டிருக்கலாம்!

ஆனால் என்றும் என்னுடன் என்
உள்ளத்தில் அணையாத தீபமாக
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது உன் கவிதைகள்!

என் உயிர் மாய்க்கப்பட்டு என்னை
எரித்தாலும் என் சாம்பல் கூட
உன் கவி பாடும்!

எழுதியவர் : ஜோதி (29-Dec-12, 10:47 am)
பார்வை : 243

மேலே