புலம்பெயர்ந்து தவிக்கிறேன்

உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகள் ஆயிரம்
அமைதிக்கும் வசதிக்குமாய்
அழகான யாழ்மண்ணை விட்டு
புலம்பெர்ந்து வந்தேன்
அய்யோ அய்யகோ

கிளர்ந்து எழுந்த நிகழ்வுகள்
ஏங்கித் தவிக்கும் என் உணர்வுகள்
ஓங்கி உரைத்திடும் தனிமையில்
அந்த நாள் ஞாபகம்

யாழ்ப்பாணம் இனும் அழகிய
நகரத்துக்குள் எளிமை வாய்ந்த
கிராமங்கள் என் கிராமங்கள்
வறுமையில் வாடிய போதும்,
பசுமையாய் இருந்தது என் வாழ்க்கை

பொழுது விடிந்ததும் காலைச்சந்தை
மதியச்சந்தை மாலைச்சந்தை
முற் சந்தியிலும் எத்தனை எத்தனை சுவைகள்

வாழ்கையில் கிடைத்த முதல்நடப்பையும்
துள்ளித்திரிந்த அழகிய வாழ்க்கையையும்
காணாமல் போன நட்புகளும்
மீண்டும் மீண்டும் என் நெஞ்சில்

கிணறுகள் ஊற்றெடுக்க எங்களின்
வறுமை அகன்று வாழ்வு பூத்திடும்
ஊரும் ஊராரும் தூயமையாவோம்

காற்றில் சலசலக்கும் இலைகள்
இரவில் இசை எழுப்பும் பூச்சி
உண்மையான உழைப்பும்
உறக்கத்தில் வரும் விழிப்பும்
நீரில் மூழ்கிய சூரியன்
எத்தனை எழில்கோலம்

அதிகாலை சூரிய ஒளியில்
லேசாக வீசும் காற்று கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்

இலைகளின் பசுமை
இருளில் ஒளிரும் விண்மீன் கள்
கிலை ஒழிந்து கீதம்பாடும் குயில்கள்
தேன் இதழால் சிரிக்கின்ற பூக்கள்

இழந்தவை இழந்தது தான்
சிறகுடைத்த வண்ணத்துப் பூச்சி நான்

எழுதியவர் : (29-Dec-12, 5:40 pm)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 93

மேலே