கற்பழிக்கும் காமுகன்களை அழித்து கற்பிப்போம்...
காம ரசம் பெருக்கெடுக்க,
கண்ட பெண்ணையெல்லாம் கலவிக்கிழுக்க,
கட்டில்லா காமுகங்களை,
சட்டமென்ன செய்யுமிங்கே..
காம வெறியேறினால் சென்றுவிடு,
காமுக மாதுகளிடத்து இரந்து மண்டியிடு,
மோக வில்லை வளைந்து,
தேகப் பணிகளை நடத்தி,
நோய்களைப் பெற்றிடு..
நான்கு வயதுக் குழந்தையை,
நடை பயிலும் வயதினில்,
நாறிப் போன அந்த எண்ணம்,
உன்னுள் ஊறிப் போவதெப்படியோ..
காம ஓட்டம் கண்டால்,
காட்டில் உறங்கிக் கிடக்கும் நரனையும்,
கிளறியெடுத்து உடல் புசித்து,
கலவி நடத்தி ருசிப்பாயோ..
----இழிவு படுத்தத் தெரியவில்லை இதற்க்கு மேல்
பெண்ணை மதியா காமத்தை,
பிறழ்ந்து தழுவி வளர்ப்பவனோ..
பலனை நீ அனுபவிக்க வேண்டுமடா,
பாதி கூட வேகாதிவள் கட்டை, இல்லையென்றால்...
தொட்டிலுறவு கலவியை,
தொய்வு செய்த காமுகனே,
எட்டிறாது இவ்விழிவு எண்ணம்,
கட்டாயக் கலவி, ஐந்தறிவிடத்தும்..
கலவி..
உள்ளம் புணர்ந்து,
உடல் நடத்தும் வேட்கை..
இதை உணராததால்.
நீ நடத்தியது வேட்டை..
வேட்டை ஆடாய் இன்னொரு உயிர் வீழுமாயின்,
இச்சமூகத்தின் வேடிக்கை நிலைத்திருக்காது..
வெட்கப் படுகிறேன்,
என் ஆண் பிறப்பிற்கு..
வெறிநாய்கள் இவர்களும்,
ஆண்களாய் பிறந்ததற்கு..
இவர்களை மண்ணித்துவிடு சட்டமே,
வழக்கம் போல், வழக்கிலிருந்து விடுவித்துவிடு..
இவ்வெறியர்களுக்கு, சட்ட தண்டனை போதாது,
சாட்டை தண்டனை கொடுத்தருள்வோம்..!!!