கலங்காதிரு மனமே.....

அன்பும்
ஆதரவும்
இனிமையும் தந்த ஓர் உயிர்
ஈசனிடம் போனாலும்......
உயிருக்கு உயிரான ஓர் உறவு
உன்னை புரிந்து கொள்ளாமல்
பிரிந்து போனாலும்.....
உறவுகள் தொடர்ந்து
வசைபாடியே உன்னை
வலுவிழக்க செய்தாலும்....
சிற்பமாய் செதுக்கி வடித்த
கனவுகள் சில சமயம்
சிதறி போனாலும்.....
கைகூடும் நேரத்தில் பல
வாய்ப்புகள் வாயிலேறி
வந்த வழியோடு திரும்பி
போனாலும்...
வெறித்தனமாக போராடியும்
வெற்றி எனும் கனி
கனிய தாமதமானாலும்.....
நயவஞ்சகரின் நாக்கில்
வழிந்தோடும் விஷம் கண்டு
உன் குருதி குதித்து எழுந்தாலும்.....
வஞ்சகமாய், மாறி
வாழ்க்கை உன் மீது போர்
தொடுத்தாலும்...
கலங்காதிரு மனமே...
கலங்காதிரு.....
எழு.. எழு....
எழுந்து,
நிமிர்ந்து நில்,
துணிந்து செல்,
நம்பிக்கையோடு போராடு.......
நாணயம் தவறாது
நாகரிகம் மாறாது
நமக்கு கிடைத்த ஒரு பிறவிதனை
நல்ல எண்ணத்தோடு
நயம்பட வாழ்ந்து காட்டு....
- PRIYA