யார் அவள்?
யாரைக் கூப்பிடுகிறது மனம் ?
யாருடைய தோற்றம்
மூளையில் எங்கோ பதிந்திருந்து
திடீரென்று மனத்திரையில் தோன்றி
அடையாளம் காண்பதற்குள்
மறைந்துவிடுகிறது?
ஏன் அழிவதுமில்லை
தெளிவதுமில்லை இப்படிம்ம?
என் உணர்வகளுடன்
கண்ணாமூச்சி விளையாடும்
இவள் யார்?
ஏன் இவள் தோற்பதுமில்லை
ஜெயிப்பதுமில்லை?
விளையாடுவது மட்டுமே
இவள் நோக்கமோ !