சூழ்நிலை கைதி

பட்டாம்பூச்சியாய் பறந்தேன் நேற்று......
சிறகொடிந்து நிற்கிறேன் இன்று...
பள்ளிப்படிப்பு வரை தெரியவில்லை..
நான் பாசத்தின் மடியில் தவழ்ந்ததால்....
கல்லூரி படிப்பு வரை தெரியவில்லை..
நான் கனவுகளின் நட்பில் வளர்ந்ததால்....
படிப்பும் முடிந்தது...
வாழ்க்கை புரியவில்லை....
வீட்டிலிருந்து பணிபுரிய ஆசைப்பட்டேன்....
என் படிப்பு விடவில்லை....
இயந்திரவியல் எடுத்த என்னை
இயந்திரதனமாய் ஓட விட்டது பல ஊர்களுக்கு....
பணித்தேடி பல மைல்கள் கடந்து வந்தேன்.....
பாசத்தை மறந்துவிடுவேனா என்று...
பத்து மாதம் சுமந்தவள் அங்கே...
பணம் தேடும் பாவியாய் நான் இங்கே...
அதட்டலோடு அன்பான தந்தை அங்கே...
அதிர்ச்சியோடு சுற்றி திரிகிறேன் நான் இங்கே..
ஆசையோடு கொஞ்சிய உறவுகள் அங்கே...
ஆட்கள் யார் என்று புரியமால் நான் இங்கே..,
விழிகளிலிருந்து விழும் கண்ணீரை துடைக்க
நண்பனுண்டு அங்கே...
விழிகளிலிருந்து விழும் கண்ணீரை துடைக்க
கைக்குட்டைதான் இருக்கு இங்கே..
தலை வலித்தாலும் கோதிவிட யாருமில்லை ....
தலைநிமிர்ந்தாலும் பாராட்ட யாருமில்லை ....
பணிக்கு சென்றாலும்......
தாய்,தந்தையே உன் முகம் தான் என் முன்னே
நிற்கிறது ..
விழியோரம் நிற்கிறேன்....
மனசுக்குள் தவிக்கிறேன்.....
பந்தத்தை விட்டு பறந்து வந்தேன்....
மந்தமாய் மாறிப்போனேன் வாழ்வினில்....
பணியை விட்டு செல்லலாம் என்றால்
முடியவில்லை...
பந்தம் எனும் உணவை பணம் ருசித்துவிட்டது...,
சொந்தஊரில் பணிக்கு செல்லலாம் என்றால்....
அடிமாடாய் வருகிறாயா என்கிறான்.....
வெளியில் வந்தும்.......
வெளிச்சம் போனது வாழ்வில்......
கைநிறைய பணமிருந்தும்....
மனம் நிறைய பாசமில்லை....
விழியிருந்தும் பார்க்கமுடியவில்லை.....
செவியிருந்தும் கேட்கமுடியவில்லை...
உதடு துடித்தும் பேசமுடியவில்லை...
நானோ!
சிறையில் வாடும் கைதியை விட....
மனச்சிறையில் வாடுகிறேன்
சூழ்நிலைகைதியாய்...

எழுதியவர் : இளவரசி (31-Dec-12, 12:06 pm)
Tanglish : sulnilai kaithi
பார்வை : 207

மேலே