!!!!.....நாங்கள் யார் ....!!!!!!
அகிம்சை என்னும் பூதத்தை
ஒழிக்க வந்த
அக்கினி சிறகுகள்
நாங்கள் ....!!!
வறுமை என்னும் கொடிய
நோயை விரட்ட வந்த
போராளிகள்
நாங்கள்...!!!
அநீதி என்னும் நஞ்சுகளை
அடியோடு ஒழிக்க வந்த
அசதய சூரர்கள்
நாங்கள் ...!!!
போலி முகம் அணிந்திருக்கும்
சத்ருகளை
துவம்சம் பண்ண வந்த
சத்தியவான்
நாங்கள் ....!!!!
நாங்கள் யார் ....?
சாதிக்க துடிக்கும்
ஒவ்வொரு
இளைஞனின்
இதயத் துடிப்பு !!!!!!!!
நாங்கள் !!!!!
ஏ.....!!!
இளைஞனே.....?
எழுந்து நில்
எரிமலை கூட வழி விடும்
வீழ்ந்து கிடக்காதே
சிலந்தி கூட
உன்னை சிறை பிடிக்கும் ....!!!!
இனியதோர் விதி செய்வோம் !!!!
புதியதோர் புவி அமைப்போம் !!!!!
சாதி மதம் இல்லா சமூகம்
அமைப்போம் பல சாக்கடை
புழுக்களை
தகர்த்து எறிவோம் !!!!!!