விண்மீன்கள்...வெறும் விண்மீன்களல்ல....
இரவு நேரங்களில் விழித்திருக்கையில் நாம் காண்பது...
விண்மீன்கள் அல்ல...
விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையின் விதைகளாயிருக்கலாம்.....
வாழ்ந்தோரும் வீழ்ந்தோரும் விட்டுச்சென்ற வாழ்க்கைப் பாடங்களாயிருக்கலாம்...
காலம்காலமாய் சேர்த்துவைத்த முத்துக்களாயிருக்கலாம்....
கள்ளமில்லாத சிறுபிள்ளையின் புன்னகையாயிருக்கலாம்....
வாழ்க்கை கோலம் வரைய எத்தனித்து...
இணைக்காமல் விட்டுச்சென்ற புள்ளிகளாயிருக்கலாம்...
எனவே விண்மீன்கள் வெறும் விண்மீன்களல்ல....
விட்டுப்பிரியவேண்டாம் விழியிருக்கும் வரை...

