புத்தாண்டு சிந்தனை

புத்தாண்டு பிறக்கும் வேளையில்
புதுப் புது எண்ணம் மூளையில்!!

பாரதி நாட்டில் பயங்கரவாதம்
பறையோர் மறையோரென பிரிவினைபேதம்
போதாக்குறைக்கு மேடைதோறும் விவாதம்
பொதுக்கணக்கில் எழுதப்படுகிறது சேதம்

வேற்றுமையில் ஒற்றுமை பேசுகிறது தேசம்
வெத்துவேட்டுகளால் தினந்தோறும் நாசம்
வலிவற்ற பெண்கள்மீது வன்முறை காமவெறியர்களால் தடுமாறுகிறது தலைமுறை

பிதுங்கிய விழிகளோடு எப்போதும் மக்கள்
பேதிஎடுத்தவன் நிலையில் தொடருது சிக்கல்
தேயுது உலகின் பொருளாதாரம்
ஓயாத ஆயுத தாக்குதலால் சேதாரம்

நல்லதும் கெட்டதுமான நாட்காட்டி
அல்லவை நீக்கட்டும் அறிவூட்டி
வரும் பன்னிரெண்டு மாதங்கள்
அருந்தமிழ் கருத்தை ஓதுங்கள்

விண்ணில் மின்னும் நட்சத்திரம்
மண்ணில் விதைக்கட்டும் புதுசரித்திரம்
கண்ணில் தெரியும் ஒளிப்பூக்கள்
காணாமல் ஆக்கட்டும் கலவரத்தீக்கள்

ஆணும் பெண்ணுமாய் மகிழ்ச்சியில் இந்நாள்
அவலங்கள் மறையட்டும் தன்னால்!!
மகிழ்ச்சிக்குள் மூழ்கட்டும் ஆதிக்கங்கள்
பூமித்தாய்க்கு இனிவேண்டாம் இந்த துக்கங்கள்!!!!

எழுதியவர் : க .கார்த்தீசன் (31-Dec-12, 11:13 pm)
பார்வை : 214

மேலே