யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்....!
மிடுக்கான உடைய போட்டு
எடுப்பான நடைய போட்டு
கழுத்திலே " டை " ய கட்டி
காளை நடந்து வந்தானடி....!
கருப்பு கண்ணாடி கண்ண மறைக்க
நெருப்பு போல இளமை தெறிக்க...
சுறு சுறுப்பா துடி துடிப்பா
சுற்றி அவனும் வந்தானடி.....!
பாத்த பொண்ணுக மயங்கிடவே
பந்தாவான தேஜஸாக....
பக்கம் நடந்து வந்தவனை....
பார்த்தேன் நானும் பவ்யமாக....!
கட்டப் பட்ட " டை " முடிச்சில்
கண்ணைப் பறிக்கும் மினுமினுப்பு
கண்ணை கூர்மையாக்கி இன்னும் பார்த்தேன்
கடவுளே அது என்ன சிவப்பு புள்ளி ஒளி....!
குட்டிக் கேமரா ஆனில் இருந்தால்
கொட்டிடுமாம் சிறு " எல் - ஈ - டி " ஒளி....!
என்னடான்னு திரும்பிப் பார்த்தேன்
குனிந்து ஒருத்தி பெருக்கிக் கொண்டிருந்தாள்...!
அடப் பாவி...! தெருப் பொறுக்கி....!
அவளப் பாத்துதான் நீ வாரியா.....?!
கண்ண மறைக்க கருப்பு கண்ணாடி
கேமராவ மறைக்க ஒனக்கு டையி.....!
" பளாரென " விட்டேன் கன்னத்தில்
பட்டென்று கீழே விழுந்தான்.......
டை யில் இருந்து தெரித்தே...
தரையில் விழுந்தது குட்டிக் கேமரா.....!
பிடித்து அவனை இழுத்தே....
கொடுத்தேன் காவல் நிலையத்தில்.....
உடம்பை மோப்பம் பிடிக்கும் நாய்களே....
உங்கள் உணர்வுகள் மறத்துப் போகட்டுமே....!
சதையை தேடி அலைகிறீரே ......
சமயம் பார்த்து நடிக்கிறீரே .......
நல்லவர்கள் என்று நம்பிப் பழகினால் ....
நயவஞ்சகமாய்....உடல்.....திங்கிரீரே.....
திருந்தாத ஜென்மங்களே......
தெரியும் பெண்களை உங்கள்
தாயாய் பாருங்களேன்......!