ஓட்டைப்படகு....
மாலை நேர கடற்காற்றை காதலர்களுடன் சேர்ந்து சுவாசிக்கிறது....
கடற்கரையில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள ஓட்டைப்படகு...
முற்றத்தில் அமர்ந்து கைவிசிரி வீசும் என் தாத்தாவைப்போல....
சுழன்றடித்த சூறைக்காற்றாலோ...சுனாமியாலோ சேதப்படுத்தப்பட்டிருக்கலாம்...
முதுமையும் வருத்தமும் வாட்டிய என் பாட்டனைப்போல...
முன்னொரு காலத்தில்பொருள் தேடவோ போர்புரியவோ குலப்பெருமை காக்கவோ...
ஆழியை அரற்றாமல் பயணம் செய்திருக்கக்கூடும்...
ஓடாய் உழைத்துதேய்ந்திருக்கும் என் அய்யனைப்போல...
பிரளயத்திலும் பேராபத்திலும் உன்னை அந்த ஓட்டைப்படகு...
சிறு மரக்கட்டையாய் காத்திடும்....
அதுபோல வாழ்வில் துன்பம் வந்துனை துவைக்கும் போது.....
கரம் கொடுத்து காப்பவர் உன் பாட்டனாகவேயிருக்கக்கூடும்.....
எனவே இன்னிலை நன்னிலை இல்லையாயினும்....
அதன் முன்னிலை கருதியேனும் ஓட்டைப்படகையும் ஓம்புவோம்...

