விடைபெறட்டும் வினையாகும் சங்கதிகள்...!
எனெக்கென்ன
என்றே விட்டொழிய ,
எப்போதும் நினையாது..!
என் மனமும் அடங்காது..!
காரணம்
கற்றுத் தரும்
கருத்தினை , பிழையாய்
கவனமற்று நீ ஏற்பதேனோ..?!
புரிதல்
புதிய வாதமதைப்
புகட்டிக் களிப்புற்றுப் ,
புலம்பலைத் தருவது சரியோ...?!
பொய்யாய்
பொடிநடையாய்
பிதற்றல் தொடர்ந்தால் ,
பிணியாகி வலி செய்யாதோ..?!
அன்பனே
அவசரம் வேண்டாம் ,
அழகாய்க் கோபமுறுவதால்
அவதூறு பேசிடல் கொல்லாதோ..?!
சிந்தையை
சிறிதாக்கிப் பார்க்கும்
சிலவகை முரண்பாடுகளை ,
சினந்து ஏற்றல் சிறுமையாக்கதோ..?!
உனக்கென்ன
உணராது போய்விடுவாய்
உறக்கமும் கொண்டெழுவாய் ,
உளறும் என்னை நினைப்பாயோ..?!
ஒன்றை
ஒருபோதும் மறவாதே ,
ஒற்றைநாள் நம்மை சோதித்தால்
ஒன்றிய கருத்துக்கள் மாறிவிடுமோ..?!
விட்டுவிடு
விடைபெறட்டும் ,
விளங்காத சதிகளால்
வினையாகும் சங்கதிகள்..!