மலரே.....
இலைகளுக்கிடையில் நின்றே
இரு(ற)ந்து போகும் வாழ்வைச் சொன்னாய்
இறைவனின் பாதத்தில் நின்றே
இருக்குமிடம் சிறப்பித்தாய்
இறங்கிவரும் பனியைத் தாங்கி
இருமாப்பின்றி இருந்தாய்...
முட்களுக்கிடையே நின்றே
இரணங்களைத் தாங்கி வந்தாய்..
மலர்வதும் உதிர்வதுமாய் நின்றே
வாடிக்கையாய் வைத்திருந்தாய்
இருக்குமிடமெல்லாம் மணமாய்
மலர்ந்தே மௌனித்திருந்தாய்..
உன்னை விரும்பும் வண்டுக்கே
வாழ்வளித்து வாழ்ந்தாய்..
நிலமகள் மேனி மீதே
நிறம் நிறைந்த ஓவியம்போல்
நிலைத்திருந்த மலர்களென்றே
பெயரிட்ட பேரதிசயமே
உன்னைப்போல நானும்
இருந்து இறந்திட வாழ்த்துவாயே...
பிரியமுடன்
பிரேமி