உங்களுக்கெப்படி தெரியும் ?

அறைக் கதவின்
அரைக்கதவு என்பக்கம் - ஒரு
அறைக்காது அவள் பக்கம் !
என்னவள் கண்டுவிடுவேன்
என்ற பொறாமையில் - இரு
பக்கமும் நகராததுபோல் நடித்தது !

வேலைப்பளுவின்
அழுத்தத்தை - கதவுமேல்
காட்டியதால் - திறந்தது
கதவு - எனைத்தாண்டியும் !

கதவு கண் காட்டிவிட்டு
போன போது புரியாதது,
அவள் என்மேல் - வந்து
படர்ந்ததும் புரிந்தது - கண்
தன் வாய் கட்டிகொண்டது !

எழுநூறைத் தாண்டி - என்னறையில்
உருவாகிய இதயத்துடிப்புகள்
தின்று போயின - என் காதலின்
பொடி பண்ணிய நொடிகளுள்
சில பொடிகளை - போனதும்
வாங்கிக் கட்டிகொண்டன
அதற்கான அடிகளை, படிகளாய் !

கதவும் - காலத்தின்
தகவும் - காதலுக்கு
உதவும் - என்றெண்ணி
எதேச்சையாக - அவளோடிய
பாதையில் பார்வை
ஓடியபோதுதான் - புரிந்தது
நடந்தது எதேச்சை அல்ல - அது
அவள் இச்சை மட்டுமே அல்ல
என்பது நான் சொல்லாவிடிலும்
உங்களுக்கெப்படி தெரியும் ?

எழுதியவர் : வினோதன் (3-Jan-13, 6:16 pm)
பார்வை : 170

மேலே