மலர்க புத்தாண்டே...!!!

சிற்சில இன்பங்கள்,
பற்பல துன்பங்கள்,
இற்றைக்கு ஓராண்டாய்,
பற்றின்றி வாழ்ந்திட்டேன்.

ஆண்டொன்று ஆனபோதும்,
ஆறாத ரணங்கள் மட்டும்,
ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு,
ஆனந்தம் காட்டி நின்றேன்.

போதுமிந்த வேதனைகள்,
போகட்டும் கடந்த காலம்,
போராட்ட வாழ்க்கை விட்டு,
போதிய அமைதி தந்து,

மட்டில்லா மகிழ்ச்சி தந்து,
மனம் கொண்ட பணியை தந்து,
மங்கலங்கள் அனைத்தும் தர,
மலர்திடு புத்தாண்டு மகளே.......!!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : ரா. அச்சலா சுகந்தினி. (4-Jan-13, 6:12 pm)
பார்வை : 108

மேலே