தைமகளே வருக ...(பொங்கல் கவிதை போட்டி)
சித்திரையின் திருமகளாம், சீர்மிகு வீதியிலே,
முத்தமிழின் தாய்க்குலமே,மூவுலகம் காத்திடவே,
எத்திக்கும் உன் வருகைக்கு, தித்தித்து காத்திருந்து,
சித்தரித்த உன்னுருவை,சித்தத்தியில் வைப்போம்..
தை மாதம் பிறந்ததுமே, தாயிவள் வருவாளே,
திகட்டும் பொங்கலோடு, தமிழுணர்வு தருவாளே..
மாவிலை தோரணமாம் ஊரெங்கும் அணிவகுக்க,
பொன்மகள் முகம் காண எங்கும் நிறைந்திருக்க..
உலகுக்கு உணவூட்டும் உழவனை,
உழவு தந்து காத்தவளே..
உழன்று முடித்த நெல்லையெல்லாம்,
உனக்காகப் படைக்கின்றோம்..
துணையான தாயிவளே, வழி பிறக்க வந்தவளே,
அணைத்து நம்மை, வாழ்வொளிரச் செய்பவளே..
மாரி குறையா வளம் வேண்டும்,
உம் மானுடப் பிள்ளைகள் செழித்தோங்க..
பொங்கல் வழியக் காத்திருந்து,
பொன் பூச்சை ஆவின் கொம்பிலிட்டு,
போட்டிக்கு ஜல்லிக்கட்டு,
பிறந்தாள் தைமகள் எங்கள் நெஞ்சம் தொட்டு..
வருங்காலம், வளம் தந்து வாழ வைப்பாய்,
மும்மாரி கொண்டு, மூவுலகும் செழித்திடுவாய்..
எங்கள் முக்கடவுள் வடிவான திருமகளே,
இத்தைத் திருநாளிலே, நீ வருக வருகவே....!!