தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)

கல்யாண கனவோடு காத்திருக்கும்
காளையர் மற்றும் கன்னியர் கனவை
நினைவாக்கப் போகின்ற, தைமகளே வருக !

உழுது உழைத்த உழவர்களின்
உள்ளத்தில் உள்ளக் கவலையை
நீக்கப் போகின்ற, தைமகளே வருக !

கவலையின் கழுத்தறுக்க
தன் கழுத்தை காவுக்கொடுக்கக் காத்திருக்கும்
நெற்கதிரின் தியாகத்தை காணவரும்
தைமகளே வருக !

நீ பிறந்தால் வழிப் பிறக்கும் என
நம்பிக்கை பிரசவ அறையில் காத்திருக்கும்
மக்களை மகிழ்விக்க வரும்
தைமகளே வருக !

கரும்பு, மஞ்சள், பொங்கல் என்று
நெஞ்சில் ஆசை பொங்க காரணமான தைமகளே !
வருடத்தாயின் செல்லக்குழந்தையான
தைமகளே வருக !

எழுதியவர் : லால்குடி மா. பொன்ராஜ் (4-Jan-13, 7:03 pm)
பார்வை : 214

மேலே